Home » எல்லா நாட்டு மருத்துவதுறையினரும் இலவசமாக பயணிக்கலாம் கத்தார் ஏர்வேஸ்…

எல்லா நாட்டு மருத்துவதுறையினரும் இலவசமாக பயணிக்கலாம் கத்தார் ஏர்வேஸ்…

0 comment

உலகின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான கத்தார் ஏர்வேஸ், கொரோனாவை எதிர்த்து போரிடும் மருத்துவ துறையில் பணியாற்றுபவர்களுக்காக 1 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பல்வேறு நாடுகள் பேரிழப்பை சந்தித்துள்ளன. இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிர்களை பறித்துள்ள இந்த வைரஸை எதிர்த்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராடி வருகின்றனர். இரவு பகல் பாராது உழைத்து வரும் இவர்களுக்கு பாராட்டுக்களும், வேண்டுதல்களும் குவிந்த வண்ணம் உள்ளன. 


இந்நிலையில் சர்வதேச விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவ பணியாளர்களுக்காக 1 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை உலகில் உள்ள அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் பொருந்தும்.

இலவச டிக்கெட்டினை பெற விரும்புவோர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் விண்ணபிக்க வேண்டும். மே 12ம் தேதி தொடங்கியுள்ள இதற்கான முன்பதிவு, கத்தார் நாட்டு நேரப்படி வரும் மே 18ம் தேதி இரவு 12 மணிக்கு முடிகிறது. மருத்துவ பணியாளர்களுக்காக வழங்கப்படும் இந்த சலுகை அனைவருக்கும் சமமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் மக்கள் தொகையை வைத்து 6 நாட்களுக்கும் தினசரி குறிப்பிட்ட டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச டிக்கெட்டிற்கு விண்ணப்பிப்பவருக்கு 2 டிக்கெட்டுகள் முதல்தர ( Economical Class) வரிசையில் வழங்கப்படுகிறது. அதனை வைத்து அந்நிறுவனத்தின் விமானங்கள் செல்லும் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இதில் ஒரு முக்கிய குறிப்பாக கூப்பன்கள் பெற்ற பயணிகள் நவம்பர் 26 தேதிக்குள் தாங்கள் செல்லவிருக்கும் நாட்டிற்கு டிக்கெட் முன்பதிவு செய்துவிட வேண்டும். மேலும் 2020 டிசம்பர் 10ம் தேதி வரை செயல்படும் விமானங்களில் பயணிப்பதற்கு மட்டுமே டிக்கெட்டுகள் பெற முடியும். 

விமான டிக்கெட்டினை மட்டுமே அந்நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. ஆனால் விமான டிக்கெட்டிற்கான வரியை பயணிப்பவர் தான் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அக்பர் அல் பக்கர் கூறுகையில்,  கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்களுக்கு, நாம் திருப்பி செய்ய வேண்டிய தருணம் இது என தெரிவித்தார். 
மருத்துவர்களின் இந்த உதவிக்கு ஈடு எதுவும் இல்லை என்றாலும் தங்கள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, அவர்களின் விடுமுறை நாட்களை கொண்டாட உதவும் என நம்புவதாக அக்பர் அல் பக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்தான வீடியோ ஒன்றையும் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மரும் பகிர்ந்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter