சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் தேசிய பேரிடர் ஆன கொரோனா தொற்றின் காரணமாக உலக மக்கள் முழுவதும் பெரும் பாதிப்பை அடைந்திருக்கிறார்கள். இந்த சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக அதிரை ஏரியா சார்பாக அதிரை மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் 144 ஊரடங்கு சட்டம் காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து அதிரைக்கு வந்திருந்த தப்லீக் சகோதரர்கள் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடியாமல் இருந்த காரணத்தினால் அவர்கள் தனது மாநிலத்திற்கு திரும்புவதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சட்ட உதவி குழுவை தொடர்பு கொண்டு உதவி கேட்டிருக்கின்றனர். அதன்படி சட்ட உதவி குழுவின் சான்றில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இருமாநில உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு தொடர்ந்து முயன்று வந்தது. அவர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்று 13/05/2020 அவர்கள் அனைவரும் உரிய பாஸ் வசதியுடன் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்.

