158
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த (03/05/2020) அன்று அக்கறை புது தெரு மா தோப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் இரண்டு வீடுகள் எரிந்து சேதமடைந்தது.
அதனை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தீயால் சேதமடைந்த இரண்டு வீட்டார்களுக்கும், முதற்கட்ட நிவாரண உதவிகள் அன்றே வழங்கப்பட்டது.
தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை செய்து தீயால் பாதிக்கப்பட்ட இரண்டு வீட்டார்களுக்கும் இருப்பிடத்திற்கு வழிவகை செய்யும் வகையில் இரண்டாம் கட்ட நிவாரணமாக செட் அமைத்து தருவதாக முடிவு செய்யப்பட்டு இன்று கூத்தநல்லூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் 52 ஆயிரம் மதிப்பிலான செட் அமைத்து இரண்டு வீட்டாருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.