ஐக்கிய அரபு அமீரகம்,துபாயில் உள்ள தேரா என்ற பகுதியில் அமைந்துள்ள மலபார் கோல்டு பிளஸ் ஜூவல்லரியின் சார்பாக இன்று குழந்தைகள் தினம் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பலர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.குறிப்பாக அதிரையை சார்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது.ஓவியப்போட்டியில் அதிராம்பட்டினம் CMP லைன் பகுதியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் நெய்னா முகமது மகன் அப்துர் ரஜாக் அவர்கள் வெற்றி பெற்றார்.மேலும் இந்த நிகழ்ச்சியை பலர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.