தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக முடங்கி இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் உத்தரவுப்படி,தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாட்சா வேண்டுகோளின் படி மல்லிப்பட்டிணத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை துணை தலைவர்A. நாகூர் கனி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது அலி ஜின்னா சிறுபான்மை துறை செயலாளர் ஜான், சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர் சேக் இப்ராஷா மற்றும் பட்டுக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் வீடுகளுக்கு சென்று வழங்கினர்.



