Home » அதிரையில் ஐஸ்கட்டி மழையா ? வதந்திகளை நம்பாதீர்!

அதிரையில் ஐஸ்கட்டி மழையா ? வதந்திகளை நம்பாதீர்!

0 comment

வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு  புயலாக வலுப்பெற்றது. இதற்கு ஆம்பன் புயல் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்புயல் 20ம் தேதி புவவேஸ்வரில் கரையை கடக்க உள்ளது. இந்நிலையில் இப்புயலின் தாக்கம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று இரவு 9.45 மணியளவில் அதிரை கடற்கரைத்தெருவில் ஐஸ்கட்டி மழை பெய்வதாக அதிரை வாட்ஸ்அப் குழுமங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் நாம் கேட்ட வகையில், அவ்வாறு ஐஸ் மழை எதுவும் பெய்யவில்லை என கூறினர்.

அதிரையயில் காற்று மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை மட்டுமே பெய்த நிலையில், ஐஸ்கட்டி மழை பெய்வதாக பரவும் வீடியோ உண்மையில்லை என நாம் அப்பகுதி மக்களிடம் கேட்ட வகையில், தெரிய வந்துள்ளது.

ஆகையால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். சமூக வலைதளங்களில் ஒன்றை நாம் பகிர்வதற்கு முன், அதன் உண்மைத்தன்மையை அறிந்து பகிர்வது சாலச் சிறந்தது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter