தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் வட மாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்.
கொரோனோ ஊரடங்கினால் கடுமையாக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பல்வேறு உதவிகளை காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது.அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா
தன்னுடைய சொந்த செலவில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான அரிசி,மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் ரொக்கம் 100 ரூபாய் ஆகியவை சமூக இடைவெளியுடன் பங்கெடுத்து வழங்கினர்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிங்காரம்,தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார், சேதுபாவாசத்திரம் வட்டார செயலாளர் முகமது காசிம், பேராவூரணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நூருல் அமீன், மாநில மீனவர் அணி செயலாளர் கே வடுகநாதன், புதுப்பட்டினம் கிராம கமிட்டி தலைவர் முத்து பொதியன், சேதுபாவாசத்திரம் வட்டாரச் செயளாலர்கள் ரெங்கசாமி ,அபூபைதா இரண்டாம் புலிக்காடு ராமகிருஷ்ணன், மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள், மீரா முகைதீன், சாகுல் ஹமீது, ஜகுபர்சாதிக் காதர்சா ,ஆகியோர் கலந்து கொண்டனர்.






