திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், பின்னத்தூர் ஊராட்சியின் நத்தம் 9-வது வார்டு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய 2017ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி திட்டத்தின் 14-வது நிதி மானிய குழு மானியத்தில் ரூபாய் ₹4,00,000/- மதிப்பிட்டில் கட்டி நிற்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்ப்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி பத்து ரூபாய் இயக்கத்தின் பின்னத்தூர் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்
R.ஹேமச்சந்தர் B.Tech மற்றும் ஊராட்சி செயலாளர் M. தினேஷ் தலைமையில் நத்தம் இளைஞரின் குரல் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இறுதி அஞ்சலியை தொடர்ந்து தமிழக முதல்வர், முதன்மை செயலாளர், ஊள்ளாட்சி மற்றும் ஊரக வளர்சி துறை அமைச்சர், திட்ட அலுவலர் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைந்து மக்கள் பயன்ப்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி மனு பதிவு அஞ்சலில் அனுப்பட்டது.
இம்மனு மீதும் நடவடிக்கை எடுக்காமல் குடிநீர் பிரசன்னையை சரி செய்யாமல் காலம் தாழ்த்தினால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்படும் என்று போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.


