Home » அதிரை அருகிலுள்ள கிராமங்களிலும் நிவாரண பணிகளை மேற்கொண்ட அதிரை பாப்புலர் ஃப்ரண்ட்..!

அதிரை அருகிலுள்ள கிராமங்களிலும் நிவாரண பணிகளை மேற்கொண்ட அதிரை பாப்புலர் ஃப்ரண்ட்..!

0 comment

கொரோனா காரணமாக உலக மக்கள் அனைவரும் பெரும் அவதிக்கு உள்ளாகி கொண்டிருக்கின்றனர். இந்த பேரிடர் காலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அதிரை ஏரியா சார்பாக அதிரை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தனர்.

அதிரைக்கு அருகாமையிலுள்ள கிராமத்தில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி அவர்கள் இருக்கும் வீடு மற்றும் அந்த பகுதி முற்றிலும் அடைக்கப்பட்டது. அக்கம்-பக்கத்தில் யாரும் உதவாத காரணத்தினால் அவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்த தகவல் கிடைத்தவுடன் அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஏரியா தலைவர் S. முஹம்மது ஜாவித் தலைமையில் தன்னார்வலர்கள் அந்த வீட்டிற்கு சென்று, கடும் துயரில் இருந்த அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தேவையான மளிகை சாமான்கள் காய்கறிகள் மற்றும் பால் போன்றவை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
உடன் வருவாய் ஆய்வாளர் உமர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆனந்த், ஆனந்த ஜோதி மற்றும் கிராம உதவியாளர்கள் இருந்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter