Home » மனமிருந்தால் நீங்களும் உதவலாம்..!!

மனமிருந்தால் நீங்களும் உதவலாம்..!!

0 comment

2015ம் ஆண்டு தனி நபராக திரு.முஹம்மது ரியாஸ் அவர்களால் உருவாக்கப்பட்டு சமூக மக்களின் அவசர தேவைக்காக இலவச இரத்த தானம் செய்ய வழிவகை செய்வதை வழக்கமாக செய்து வந்தார். பின் நாளடைவில் இவரோடு கன்னியாகுமரிய மாவட்டத்திலிருந்து திரு.சபீர் மற்றும் ஈரோடிலிருந்து திரு.சண்முகம் மற்றும் சென்னையிலிருந்து திரு. மாரியப்பன் ஆகியோருடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களின் குருதி தேவையை பூர்த்தி செய்ய வழிவகை செய்தனர். தற்போது 2700 கும் மேற்பட்ட இலவச இரத்த தான தேவைகளை தமிழ்நாடு முழுவதும் நிறைவேற்றி உள்ளனர்.. அதனை தொடர்ந்து இவர்களின் சேவை பிற சில அண்டை மாநிலங்களிலும் தொடர்ந்தது.

நாளடைவில் பார்வையற்ற மாணவர்கள் படிப்பதற்கு, எழுதுவதற்கு, தேர்வு ஏழுதி கொடுத்தல் போன்ற உதவிகளை செய்யும் LIT THE LIGHT , ஊனமுற்ற மாணவர்களுக்கு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் WE ARE YOUR VOICE போன்ற பல NGO உடன் கைகோர்த்து VOLUNTEERING மற்றும் சுயவேலை வாய்ப்பு போன்றவற்றை செய்துவந்தனர். மேலும் ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி செய்தல், கல்வி உதவி தொகை போன்றவை செய்து வந்தனர்.

2019 ம் ஆண்டு -SOS FOUNDATION – squad of selfless- என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஈரோடு, அரியலூர், விழுப்புரம், தேனீ, கன்னியாகுமரி மற்றும் திருச்சி போன்ற பகுதிகளில் நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாக வார வாரம் கூட்டம் நடத்தப்பட்டு தற்போது 5000 மேற்பட்ட தன் ஆர்வலர்கள் நம்மிடம் இணைந்து பயணித்து வருகின்றனர்.

கூத்தாநல்லூர் பகுதியில் திரு.அஜ்மல் அவர்களின் தலைமையில் 144 தடை தொடங்கியதிலிருந்து சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்டமாக முகக்கவசம் கொடுக்கப்பட்டது. பின்பு 144 தடை தொடர்ந்ததால்,
கூத்தாநல்லூர் கருணை உள்ளம் கொண்டவர்களின் பொருளாதார உதவியால் கூத்தாநல்லூர், சேணக்கரை, கோட்டகச்சேரி, முகாந்தனுர், பூந்தோட்டம், பொதக்குடி, அத்திக்கடை மற்றும் மன்னார்குடி போன்ற பகுதிகளில் இக்கட்டான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெற்று அவர்களின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்..

மேலும் இதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக தற்போது ஈரோடு, கன்யாகுமரி போன்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த படுகிறது…

தற்போது

We want volunteers

Squad of selfless

வா தோழா கைகோர்ப்போம்.. !
மக்களின் குறைதீர்ப்போம்… !!

என்ற குரல் மூலம் சமூக ஆர்வலர்களை கரம்கோர்த்து வருகின்றனர்.
மேலும் இதன்மூலம் வேண்டுக்கோள் ஒன்றை பதிவு செய்தனர்..
நாடே முடங்கி கிடக்க, தினவருமானத்தை நம்பி வாழும் மதம் சாரா பல மக்களின் பசியைப் போக்க,
நாங்கள் முயற்சி செய்து நன்மக்களின் உதவியுடன், ஊரடங்கு தொடங்கிய காலம் முதல் தேடி தேடி உதவி செய்து வருகிறோம்.

மனமிருந்தால் நீங்களும் உதவி செய்யுங்கள்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter