Home » நேர்மையான மனிதரை அதிரை இழந்துவிட்டது. சடகோபன் குறித்த நெகிழ்ச்சி சம்பவம்!

நேர்மையான மனிதரை அதிரை இழந்துவிட்டது. சடகோபன் குறித்த நெகிழ்ச்சி சம்பவம்!

by அதிரை இடி
0 comment

நேற்றையத்தினம் போர்வெல் கான்ட்ராக்டர் சடகோபன் அவர்கள் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் அன்பாகவும், கண்ணியமாகவும் பழகக்கூடியவர் என்பதால் அனைத்து சமுதாய மக்களின் நன்மதிப்பை அவர் பெற்று இருந்தார்.

இவரது நேர்மைக்கு பல நிகழ்வுகள் இருப்பினும், குறிப்பாக ஓர் நிகழ்வு எங்கள் மத்தியில் அவரது மதிப்பை உயர்த்தியது. கடற்கரையோர நிலப்பகுதியில் போர் போட வேண்டிய பொறுப்பை சடகோபன் அவர்களிடம் நாங்கள் ஒப்படைத்தோம். 100 அடியில் நல்லத்தண்ணீர் கிடைக்காவிட்டால், அடுத்து 500 அடிவரை கட்டாயம் போர் போட்டே ஆக வேண்டும் என்ற நிலை. பிறர் கட்டாயம் 500அடி போர் போட்டே ஆக வேண்டும் என பேசிக்கொண்டிருக்க, அதெல்லாம் பயப்பட வேண்டாம் தம்பி: முயற்சி செய்வோம் என கூறி தனது பணியை துவங்கினார். இறைவன் அருளால் 90அடியிலேயே நல்ல தண்ணீர் கிடைத்துவிட்டது. இதனை நேர்மையுடனும் மகிழ்ச்சியாகவும் எங்களுக்கு தொலைப்பேசி மூலம் தெரிவித்தார். மேலும் தொழில்சார்ந்த கொடுக்கல் வாங்களிலும் அதே நேர்மையை கடைப்பிடித்தார். இந்த சூழலில் அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி பலருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. சடகோபன் அவர்களை இழந்துவாடும் உறவினர்கள், நண்பர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் Aamina’s Constructions சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter