Home » சகோதரியின் தோழி காதலியாகும் நிலை?

சகோதரியின் தோழி காதலியாகும் நிலை?

0 comment

மனிதனின் ஆறாம் விரல் என்று வர்ணிக்கப்படும் தொலைபேசி வந்த உடன் பெற்றோர்களுக்கு தொல்லைபேசியாய் மாறிவிட்டதோ என்னவோ உண்மைதான் ..

ஆம் , பெண் பிள்ளைகளை பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோர்கள் பிள்ளைகளின் வற்புறுத்தலின் பேரில் விலை உயர்ந்த ஸ்மார்ட் தொலை பேசியை வாங்கி கொடுத்து விடுகிறார்கள் .

இதில் பள்ளி தோழிகள் இணைத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து சக தோழிகள் மத்தியில் உரையாடல் புகைப்படம் ,தகவல் போன்றவற்றை பரிமாறி நேரத்தை கழிக்கிறார்கள் . இவர்களில் சிலருக்கு தோழிகளின் வீட்டில் ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை .

இந்நிலையில் தோழிகள் மத்தியில் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோ கிளிப்புகளை தனது வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகளிடம் இது தான் என் தோழி என்று விளையாட்டாக காட்டும் சகோதரிகள் இதன் விளைவு ஆபத்தானது என அறியாமல் இருப்பது வேதனைக்குறிய விஷயமாகும். இதனால் எல்லா ஆண்பிள்ளைகளும் தவறு செய்வதில்லை மாறாக ஒரு சில ஆண்கள் சகோதரியின் தோழி என்று பாராமல் காதல் வலையில் வீழ்த்தும் இவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றே சொல்லாலாம் .

சகோதரியின் தோழியின் தொலைபேசி எண்ணை பெற்று சகஜமாக தொடர்பு கொண்டு காதல் வலையில் சிக்கவைக்கும் இவர்களுக்கு நண்பர்கள் பட்டாளம் துணை நிற்கும் போக்கு தொடர்கிறது அது மட்டுமில்லாமல் .மாலையில் இருசக்கர வாகனத்தில் பள்ளி விட்டு செல்லும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்யும் விதமாக உரசுவது போல் வாகனத்தை ஓட்டி செல்வது , வித்தியாசமான ஒலி எழுப்புவது ,தொலைபேசி எண்ணை காகிதத்தில் எழுதி வீசுவது போன்ற செயல்களில் இன்றைய இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க வேண்டிய சமூக அமைப்புகள் மௌனிகளாக உள்ளது வேதனையிலும் வேதனை .

இதேபோல் பெற்றோர்கள் செல்லாமாக வளர்க்கும் பிள்ளைகளின் செல்பேசிகளை கண்காணிப்பதோடு தேவையற்ற தொடர்புகள் இருக்கும் பட்சத்தில் முறையாக பதற்றமில்லாமல் விசாரித்து , பிள்ளைகளின் நல்லதொரு எதிர்காலத்திற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்பதே அவசர அவசியமான ஒன்றாகும் .

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter