Home » முத்துப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

முத்துப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

by
0 comment

முத்துப்பேட்டையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆட்டிறைச்சி சம்பந்தமாக, இறைச்சியின் விலையை குறைத்து சரியான விலையை நிர்ணயிக்குமாறு முத்துப்பேட்டை மக்கள் சார்பாக கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து கறிக்கடை உரிமையாளர்களை தனித்தனியே அழைத்து கூட்டமைப்பின் தலைவர் ஜெர்மன் அலி மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையின் முடிவில் நமதூரில் செயல்பட்டு வரும் 10 இறைச்சி கடைகளில் 8 கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்ணயித்த 700 ரூபாய்க்கு ஆட்டு இறைச்சியை விற்க ஒப்புக்கொண்டனர். இரண்டு கடை உரிமையாளர்கள் மட்டும் கூட்டமைப்பு நிர்ணயித்த விலையை ஏற்க முடியாது என்று கூறிவிட்டனர்.

எனவே முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் கூட்டமைப்பு நிர்ணயித்த 700 ரூபாய்க்கு மட்டும் விற்கும் கடைகளில் இறைச்சியை வாங்குமாறும் இது நமது ஊரின் கண்ணியம் சார்ந்த விஷயம் என்பதால் 700 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் கடைகளில் ஆட்டு இறைச்சி வாங்க வேண்டாமென்று இன்று (22.5.2020) நடந்த அனைத்து முஹல்லா ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரொனா தோற்றாள் ஊரடங்கு அமலில் இருப்பதால் நம்மால் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளியில் சென்று தொழுகையை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளோம்.

மேலும் உலமா சபை வக்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்வருட நோன்புப் பெருநாள் தொழுகையை பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுமாறும் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்

இப்படிக்கு
அனைத்து மஹல்லா ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு, முத்துப்பேட்டை.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter