தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் செக்கடி பள்ளி அருகாமையில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்வதற்கு ஏற்றவகையில் நடைப்பாதைகளை அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது. பூங்காவில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.
மர்ம நபர்கள் சிலர் பூங்காக்களில் உள்ள உபகரணங்களை சேதப்படுத்துவதும்,உயர் தடுப்புகளையும்,கதவுகளை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.இதனை கண்ட பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நடைப்பாதைகளை சுற்றி CCTV கேமரா பொருத்தி சமூக விரோத கும்பல்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது.