தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பட்டுவரும் நிலையில் பல குடும்பங்கள் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சியில் (செங்கப்படுத்தான்காடு, இராசியங்காடு, மஞ்சவயல், கருங்குளம், கரிசைக்காடு) ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் வெளிநாடு வாழ் நண்பர்களின் உதவியோடு ஊராட்ச்சிக்கு உட்பட்ட ஆதரவற்றோர், முதியோர், ஊனமுற்றோர் என 100 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற மல்லிகை பொருட்கள் அப்பகுதி இளைஞர்களால் வழங்கப்பட்டது.
திருமலைநாதன்,சிங்காரவேல்,சிவா, ஹரிஹரசுதன்,ராஜா, செந்தில்,குமரவேல், தமிழரசன்,மகேஷ்,அம்பிகாபதி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று இப்பொருட்களை வழங்கினர்.




