தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு பிரதான சாலை பெண்கள் மதரஷா,பள்ளி மாணவர்கள்,வாகன ஓட்டிகள் என அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது.இந்த சாலையை அமைந்துள்ள கழிவுநீர் வடிகால் சேதமடைந்துள்ளதால் கழிவுநீர் வெளியாகி சுகாதர சீர்கேட்டை உருவாக்கி வருகிறது.இதனை சிலவருடங்களாக யாரும் சரிசெய்யாததால் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்களின் பொருளாதர உதவிகளுடன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு தேவையான நிதி இல்லாததால் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ளவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால்,இதனை உடனடியாக கருத்தில் கொண்டு அதிராம்பட்டிணம் பேரூராட்சி நிர்வாகம் தன்னுடைய பொதுநிதியிலிருந்து மீதமிருக்கும் வடிகால் அமைக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் ஏக்கமாக இருக்கிறது.
அதிரை பேரூராட்சி உடனடி நடவடிக்கை எடுக்குமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.