தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு பகுதியில் அமைந்துள்ள வெட்டிக்குளத்தை சுற்றி பல்வேறு வகையான குப்பைகள் அங்குமிங்குமாக தேங்கி காணப்பட்டது.இதனால் அப்பகுதிகளில் சுகாதர சீர்கேடும்,நோய்தொற்று பரவும் அபாயத்துடன் காணப்பட்டது.
தூய்மை மற்றும் சமூக பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் இன்று குளத்தை சுற்றிய இடங்களில் உள்ள குப்பைகளை அப்புறபடுத்தினர்.இளைஞர்கள் குப்பை அப்புறப்படுத்தி பழைய கீற்று போன்றவைகளை தீ வைத்து எரிக்கப்பட்டது.இந்த தூய்மை பணியில் ஆர்வத்துடன் பணிகளை செய்தனர்.இந்த பணி அந்த பகுதி மக்களால் வரவேற்கப்பட்டது.
தூய்மை திட்டம் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் நடத்தும் நாடகத்தை விட்டு இதுபோன்ற களப்பணியில் நேரடியாக களம் இறங்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த தேச மக்களின் குரலாய் இருக்கிறது.