தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் KMM.அப்துல் ஜப்பார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் மத்திய அரசின் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தினர்.அதன் ஒருபகுதியாக மல்லிப்பட்டிணம் தபால் நிலையம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் மத்திய அரசை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் A.கமால் பாட்ஷா,மாநில மீனவரனி செயலாளர் வடுகநாதன்,மாவட்ட மீனவர் அணி தலைவர் வீரையன்,ஒன்றிய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நூருல் அமீன்,அபு உபைதா,சேதுராமன், பெரியைய்யா மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.


