14
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணம் கிளை சார்பில் இன்று(26/05/2020) காலை உதவி மின் பொறியாளரை சந்தித்து பேராவூரணி வட்டாரம் பெரியநாயகிபுரம்-ஆவணம் பஞ்சாயத்தில் சில நாட்களாக மின்தடை அதிகரித்த வன்னம் உள்ளது.பண்டிகை காலங்களில்
பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்
குறைந்த மின்அழுத்த மின்சாரம் வருவதால் வீட்டிற்கு
குடிநீர் இறைக்க உதவும் மின் மோட்டார்கள் மற்றும் பஞ்சாயத்து குடிநீர் மின்மோட்டார்கள் பயன்படுத்த இயலவில்லை அடிக்கடி பழுதடைகிறது.
மேலும் குறைந்த மின்னழுத்தத்தால் வீட்டு உபயோக எலெக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைகிறது.
எனவே மின்னழுத்தத்தை சமநிலையில் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் சார்பாக கேட்டுக்ககொண்டனர்