261
சென்னை அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே மஃமூர் பள்ளியின் துணை இமாம் அப்துல் ரஹ்மான் ரஹ்மானி அத்ரமி அவர்கள் பழவேற்காடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
மறைந்த அப்துல் ரஹ்மான் ஹஜரத் அவர்கள் அதிராம்பட்டினம் ரஹ்மானியா அரபிக் கல்லூரியில் ஆலீம் பட்டம் பெற்ற மார்க்க பணி செய்து வந்தார்.
அதிரை மக்களுக்கு மிகவும் பரிச்சயமான இவரின் இறப்பு செய்தி பேரிடியாக இருக்கிறது என அவருக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களின் ஒருவருமான பேராசிரியர் தாஜுதீன் ரஹ்மானி அத்ரமி தெரிவித்து உள்ளார்.
மறைந்த அன்னாரின் பாவங்களை மன்னித்து உயரிய சுவர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய அந்தஸ்த்தில் வைப்பானாக என துஆ செய்தார்.