அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த J.J. ஷாகுல் ஹமீது என்பவருக்கு கல்லீரல் நோய் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு இவருக்கு உடனடியாக கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்காக பெருந்தொகை தேவைப்படும்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் செய்தியாக செளியானது இதில் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே தனவந்தர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற நிலையில் நோயாளியின் உடல் நாளுக்கு நாள் மோசமாக சென்று கொண்டுள்ளது. போதுமான நிதி கிடைக்காத காரணத்தால் அறுவை சிகிச்சை தடைப்பட்டு உள்ளது.
எனவே தயாள குணமுள்ள தனவந்தர்கள் தங்களால் ஆன பொருளாதார உதவிகளை கீழ்க்காணும் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டுகிறோம்.