தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெருவை சேர்ந்த, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் சேக் அப்துல் காதர் அவர்களின் மகன் ஜியாவுர் ரஹ்மான்.இவர் மருத்துவம் முடித்து பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளும்,சேவைகளும் செய்து வருகிறார்.
கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மல்லிப்பட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன.இதனால் மருத்துவ சிகிச்சைக்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வரக்கூடும் என்பதால் தான் பெற்ற மருத்துவ கல்வி கொண்டு பலருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக அளித்து வந்தார்.
தன்னுடைய வீட்டிலே மருத்துவ பணிகளை மேற்கொண்டு வந்தார்.அனைத்து சமுதாய மக்களுக்கும் சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச சிகிச்சைகளை அளித்திருக்கிறார்.இதனால் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இவர் ஏற்கனவே கஜா புயலின் போதும் இலவச மருத்துவ சிகிச்சையை பொதுமக்களுக்கு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.