Home » மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு – மம்தா பானர்ஜி அறிவிப்பு !

மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு – மம்தா பானர்ஜி அறிவிப்பு !

0 comment

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வரும் மே 31வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 66 நாட்களில் நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக லாக்டவுன் அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவலை தடுக்க மசூதிகள், கோயில்கள், சர்ச்களில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் 4ம் கட்ட லாக்டவுன் மே 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சூழலில் ஜூன் 1 முதல் கோயில் மற்றும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். வழிபாட்டுத் தலத்துக்குள் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜூ 1ம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்றும் மம்தா அறிவித்துள்ளார்.

முன்னதாக கர்நாடகாவிலும் ஜூ 1ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்து இருந்தது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஜூன் 1 முதல் தங்கள் மாநிலத்தில் கோயில்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter