தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஆதி திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக சதா சிவக்குமார் தலைமையில் சிறைச்சாலை போல் கூடாரம் அமைத்து அதற்குப் பின்னால் நின்று கொண்டு கைகளில் பதாகைகளை பிடித்தவாறு சமூக விலகலை கடைபிடித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி முருகன் சாந்தன் உட்பட 7 தமிழர்களை மத்திய மாநில அரசுகள் விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகம் தலைவர் சதாசிவ குமார் கூறும்போது சிறைச்சாலையில் பல ஆண்டுகளாக இருக்கும் சாந்தன் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை மத்திய மாநில அரசுகள் விடுதலை செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் எனவே தலைவர்களுடைய பிறந்த தினத்தில் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


