தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுவீடாக சென்று குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, இத்திட்டத்தில் மூலம் அதிக அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிரை ஆஸ்பத்திரி தெரு பகுதியில் உள்ள வீடுகளில் குப்பைகள் சிறு தள்ளுவண்டிகள் மூலம் பெறப்பட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள கோவில் சுவற்றை ஒட்டி அப்படியே வண்டியுடன் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.
அக்குப்பைகள் இருத்தினங்களுக்கு ஒருமுறை அப்பகுதியில் இருந்து அல்லப்படுவதாகவும் , இதனால் அங்கு பெரும் துர்நாற்றம் வீசி அதிகளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நோயை குணப்படுத்த அரசு மருத்துவமனைக்கு வந்தால் நோயை அங்கிருந்தே பெற்றுச்செல்லும் அபாயம் உள்ளதாக அப்பகுதினர் குற்றம் சாற்றியுள்ளனர்.
இக்குப்பையை தினமும் அள்ளி நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிரை அரசு மருத்துவமனை அருகே நோய் பரவும் அபாயம் , நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி?
315
previous post