கால் இடறி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்த பெண்ணிற்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவை
சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
லெட்சுமியை பரிசோதித்த எலும்பு முறிவு மருத்துவர்கள் அவருக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது.
தமிழக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில், அரசு மருத்துவமனையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையை செய்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் செய்துமுடிக்க ரூ 2 இலட்சம் முதல் 3 இலட்சம் வரை செலவாகும் எனக் கூறப்படுகிறது.