தஞ்சாவூர் மாவட்டம்,புதுப்பட்டிணத்தில் திமுகவினர் முன்னாள் முதல்வர் கலைஞரின் 97வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
ஜூன் 3ல் கலைஞரின் பிறந்த நாளை ஆரவாரம் இன்றி அமைதியாக கொண்டாட திமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் அதனை பின்பற்றும் விதமாக சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியம் புதுப்பட்டிணத்தில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் திமுக கொடியேற்றி கலைஞரின் புகழை எடுத்துரைத்தார் , மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அமைதியான முறையில் கொண்டாடினர்.சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் அமீர் முகைதீன் கலந்துக்கொண்டார். இவ்விழா ஏற்பாட்டினை புதுப்பட்டினம் திமுக பிரதிநிதி சாகுல் ஹமீது மேற்கொண்டார்.