தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் மாடுகள் குறுக்கே அமர்ந்துவிடுகின்றன. இதன் காரணமாக வாகனத்தில் வருபவர்கள் சில நேரங்களில் விபத்தை சந்திக்கின்றனர்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
கனரக வாகனங்கள் மாடுகள் மீது மோதி உயிரிழப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன்.மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் நிற்கும் மாடுகளை பிடித்து அபராதம் வசூலிக்கும் அதிகாரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் இருக்கிறது.இதுபோன்ற சம்பவங்களில் நிகழாமல் இருக்க மாடு வளர்க்க கூடியவர்கள் இரவுநேரங்களில் வீடுகளிலே கட்டி பராமரிக்கவேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.நிறைவேறுமா அவர்களின் எதிர்ப்பார்ப்பு
நேற்றுமுன்தினம் அதிராம்பட்டிணம் அருகே மல்லிப்பட்டிணத்தில் மாடுகள் சாலையின் குறுக்கே நின்றது தெரியாமல் லாரி மோதி இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரழந்து,வாகனமும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.