Home » தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேராவூரணி MLA கோவிந்தராசு ஆறுதல்

தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேராவூரணி MLA கோவிந்தராசு ஆறுதல்

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் கூறினார்.

நேற்று(ஜூன்.4) திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் ஐந்து. வீடுகள் எரிந்து நாசமாயின.அதில் பல்வேறு அரசு ஆவணங்கள்,உணவுப்பொருட்கள் போன்றவைகளும் எரிந்தன.இந்நிலையில் வீடுகளை இழந்தவர்களுக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசு,ஒன்றிய செயலாளர் மதிவாணன் இருவரும் இணைந்து மூவாயிரம் ரூபாய் வழங்கி ஆறுதல் கூறினர்.மேலும் அந்த குடியிருப்புகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய பரிந்துரைப்பதாகவும் சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா,ஒன்றிய கவுன்சிலர் மீனவராஜன்,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணி,வார்டு உறுப்பினர் பக்கர் மற்றும் இரண்டாம்புளிக்காடு கூட்டறவு சங்க தலைவர்  கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter