14
காய்ச்சல் அதிகமுள்ள மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள சிங்கிரிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தேர்வெழுத வரும் ஒவ்வொரு மாணவ, மாணவியரையும் கண்காணித்து உள்ளே அனுப்ப தேவையான கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முககவசங்கள் வழங்கப்படும் எனவும், ஒரு அறையில் பத்து மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறைகள் தயார் செய்யப்படும் என கூறினார்.