Home » மல்லிப்பட்டினம் : ரேஷன் பொருள் தர இயலாது ! நுகர்வோரை அடிக்க பாய்ந்த ஊழியர் !!

மல்லிப்பட்டினம் : ரேஷன் பொருள் தர இயலாது ! நுகர்வோரை அடிக்க பாய்ந்த ஊழியர் !!

0 comment

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம்,ராமர் கோவில் தெருவில் வசிப்பவர் அப்துல்.ரஹ்மான் மீன் பிடி தொழில் செய்து வரும் இவர் கொரோனா காலம் என்பதால் மீன் பிடி தொழிலும் சரிவர நடக்கவில்லை இந்நிலையில் பொதுமக்கள் மிகவும் கஷ்டாமன சூழல் நிலவி வருகிறது.

இதனால் தமிழக அரசு விலையில்லா பொருட்களை வழங்க உத்தரவிட்டது.

அதன்படி மல்லிப்பட்டினம் ராமர் கோவில் தெருவில் உள்ள நியாய விலைக்கடையில் இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை பெறுவதற்காக அப்துல் ரஹ்மான் சென்றுள்ளார் அவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக பொருட்கள் வழங்காமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விபரம் அறிய அவரது உறவினர் ஹவாஜா சென்றுள்ளார்.
மேலும் தாம் வழக்கறிஞர் ஜூனியர் என்றும் தம்மை அறிமுகம் செய்த உடனேயே ஆத்திரம் அடைந்த அந்த அதிகாரி இவரை ஒருமையில் பேசி அடிக்க பாய்ந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து புகாரை யாருக்கு வேண்டுமாலும் அனுப்பு என்னை ஒன்ரும் பன்ன இயலாது என தெனாவட்டாக கூறிய வீடியோ ஆதாரம் கூறுகிறது.

கொரோனா ஊரடங்கினால் வேலையின்றி தவித்து வரும் சூழலில் அரசின் இலவச பொருட்களை நம்பி ஏழைகள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இது போன்ற பொறுப்பற்ற அதிகாரிகளின் அராஜகத்தால் பல்வேறு பாதிப்புகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட TSO இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரியை இடமாற்றம் செய்வதுடன்,பொதுமக்களுக்கு அரசால் வழங்கப்படும் பொருட்களை முறையாக வழங்க ஆவண செய்ய வேண்டும்.

மல்லிப்பட்டினம் : ரேஷன் பொருள் தர இயலாது ! நுகர்வோரை அடிக்க பாய்ந்த அதிகாரி !! (வீடியோ)

மல்லிப்பட்டினம் : ரேஷன் பொருள் தர இயலாது என்ற அதிகாரி – பாதிக்கப்பட்டவர் பேட்டி!

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter