மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வர கோரி பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சமுக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் 5,6,7 ஆகிய தேதிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பதாகைகள் ஏந்தி சமுக இணையதள போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 07/06/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் பதாகைகள் ஏந்தி சமுக இணையதள போராட்டம் அக்கட்சியின் மாவட்ட து.செயலாளர் அதிரை சேக் தலைமையிலும், மாவட்ட து.செயலாளர் ஸ்மார்ட் சாகுல் முன்னிலையில் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் தமுமுக நகர தலைவர் அலிம், எஸ்.டி.பி.ஐ நகர செயலாளர் சாகுல் ஹமீது, நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் பசுமை ஜியாவுதீன் மற்றும் சாதலி, சாகுல் ஹமீது ஆகியோரும் அதிரை மஜகவின் நகர பொருளாளர் அஷ்ரப், நகர து.செயலாளர் மர்ஜுக் மற்றும் பலர் கலந்து கொண்டு வெளிநாட்டு தமிழர்களை அரசு செலவில் அழைத்து வர வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கமிட்டனர். இறுதியாக நகர செயலாளர் அப்துல் சமது நன்றியுரை கூறினார்.






