Home » அதிரை: இரவுநேர மின் வாரிய பணியாளர் போதையில் மட்டை ! மின் தடையால் நுகர்வோர்கள் நள்ளிரவில் தவிப்பு !

அதிரை: இரவுநேர மின் வாரிய பணியாளர் போதையில் மட்டை ! மின் தடையால் நுகர்வோர்கள் நள்ளிரவில் தவிப்பு !

by admin
0 comment

அதிராம்பட்டினம் மின்வாரியத்தில் பணிபுரிபவர் சேகர், நேற்று (06-06-2020)அன்று இரவு பணியாளாரக பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் வாய்க்கால் மின்மாற்றியில் மின் தடை ஏற்ப்பட்டது, இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர், அப்போது இரவு பணிக்காக சேகர் என்பவரை நியமித்து உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதனால் சேகரை தொடர்புகொண்ட அப்பகுதி நபர் தமக்கு கை உடைந்து விட்டதாகவும், என்னால் வர இயலாது என போதையில் உளரி உள்ளார்,இதில் சக ஊழியரை சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்த சேகர், நம்மிடம் இந்த நேரத்தில வர முடியாதுங்க… வேனும்னா AEட்ட பேசிக்கோங்க என உளரியுள்ளார் சேகர்.

இதனை அடுத்து நுகர்வோர் AEக்கு தொடர்பு கொண்டுள்ளார் அவரோ தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என தகவல் கிடைத்தன.

மீண்டும் தரைவழி இணைப்புக்கு செல்கிறார் நுகர்வோர் ம்ம்ஹும் நோ ரெஸ்பான்ஸ்.

கடுப்பான நுகர்வோர் மின் வாரியத்தை நோக்கி செல்கிறார் EB வாசலை அடைந்ததும் எட்டிபார்த்த சேகர் உள்ளே சென்று மற்றொரு நபரை அனுப்பி பிரச்சனையை தீர்த்துள்ளார்.

சுமார் இரணடரை மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக மின் விநியோகம் கிடைத்தன.

பணியில் இருக்கும்போது மது போதையில், கை உடைந்து விட்டதாக பொய் கூறியது, நுகர்வோரை அலைகழிப்பு செய்தது உள்ளிட்டவைகளை வைத்து மாநில மின்சார வாரியத்திற்கும், தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கும், துறை சார்ந்த அமைச்சருக்கும் தக்க ஆதாரங்களுடன் புகார் அளிக்க உள்ளதாக அந்த நுகர்வோர் நம்மிடம் தெரிவித்தார்.

மேலும் சக ஊழியர் ஒருவரை போதையில் ஒருமையில் பேசிய ஆடியோ மற்றும் பணிக்கு வர முடியாது என கராராக பேசிய ஆடியோவைகளை இணைத்து மேற்குறிப்பிட்ட இலாக்காக்களுக்கு விரைவில் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter