22
கொரோனா வைரஸ் தொற்றின் பரவலையடுத்து கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டது.அப்போது கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.தற்போது சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் கல்வி நிலையங்கள் திறப்பு குறித்து எந்தவிதமான இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்