தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் நகரத்தலைவர் அப்துல் பஹத் தலைமையில் இன்று(ஜூன்.7) மாலை நடைபெற்றது.மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர் முன்னிலை வகித்தார்.
இந்த ஆலோசனையில் கொரோனா காலகட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள்,பணிகள்,நிவாரணம் வழங்குதல் குறித்தான கருத்துகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் மத்தியில் பெறப்பட்டு ஆலோசனைகள் செய்யப்பட்டது.மேலும் இந்த ஊரடங்கில் சிறப்பாக ஆம்புலன்ஸ் சேவையை மேற்கொண்ட சேக் ஜலால்,முகைதீன் பிச்சை,ஃபயாஸ் அகமது ஆகியோருக்கு பாராட்டுக்களும்,நன்றியும் தெரிவித்து சால்வை அணிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் இறுதியாக நகரச்செயலாளர் ஜவாஹீர் நன்றியுரை ஆற்றினார்.இதில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர்.