தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த என்பவரின் மூன்று வயது 11 மாத மகன் சிறுவன் திவ்யதர்ஷன். இச்சிறுவன் 50 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்கள், திருக்குறளில் 133 அதிகாரங்கள், 193 நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்கள், மகாபாரதத்தில் கௌரவர்கள் 60 பேரின் பெயர்கள் ஆகியவற்றை மிக வேகமாக கூறி ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் தடம் பதிக்கும் உலக சாதனை முயற்சியில் இன்று ஈடுபட்டான்.
பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் முன்னிலையில் இச்சிறுவன் இந்த சாதனையை புரிந்து விருது பெற்றான். இதில்100 திருக்குறளை 4 நிமிடம் நாற்பத்தி ஒரு செகண்டிலும், 193 நாடுகளின் பெயர் மற்றும் அந்த நாட்டின் தலைநகர் ஆகியவற்றை 2 நிமிடம் 26 செகண்டிலும், 60 கௌரவர்களின் பெயர்களை 31 செகண்டிலும், 118 தனிமங்களின் பெயர்களை 1 நிமிடம் 20 செகண்டிலும், 50 ஆசிய நாடுகளின் பெயர்கள் 37 செகண்டிலும் சொல்லி சாதனை படைத்தான்.
இதையடுத்து சாதனை புரிந்த அச்சிறுவனுக்கு இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் ஜேசிஈ மண்டல தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சீல்டுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கி கௌரவித்தனர்.