70
அதிராம்பட்டினத்தில் சற்று முன்(பிற்பகல் 3.10 மணியளவில்) அதிக சத்தத்துடன் அதிர்வு ஒன்று கேட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து வாட்ஸ் ஆப் குழுக்களில், ஒலித்த சத்தம் என்னவாக இருக்கும் என்று அதிரையர்கள் மட்டுமல்லாது பட்டுக்கோட்டை, மதுக்கூர் உள்ளிட்ட மக்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.
இது இடியாக இருக்குமோ அல்ல பெங்களூரில் சத்தம் வந்தது போல் அதிரையில் சத்தம் வந்து இருக்குமோ என்றும் கருத்துக்களை பரிமாற்றம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த அதிர்வு சத்தத்தை அதிரையில் பலரும் உணர்ந்துள்ளனர்.