Home » அமெரிக்காவை உலுக்கிய கருத்து கணிப்பு – முடிவிற்கு வரும் டிரம்பின் ஆட்டம் !

அமெரிக்காவை உலுக்கிய கருத்து கணிப்பு – முடிவிற்கு வரும் டிரம்பின் ஆட்டம் !

0 comment

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக வெளியான கருத்து கணிப்பு காரணமாக அந்நாட்டு அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது. வரும் நவம்பர் இறுதியில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி காரணமாக அங்கு அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக வெளியான கருத்து கணிப்பு காரணமாக அந்நாட்டு அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிஎன்என் செய்தி நிறுவனம் மற்றும் எஸ்எஸ்ஆர்எஸ் சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பில் அதிபர் டிரம்பிற்கு எதிராக 57% பேர் வாக்களித்து உள்ளனர். அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற 43 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

2019ல் இருந்து டிரம்பிற்கு எதிராக வந்த கருத்து கணிப்புகளில் இதுதான் மிகவும் மோசமான கருத்து கணிப்பு ஆகும். அவர் இவ்வளவு மோசமான சதவிகிதத்தை இதற்கு முன் எடுத்தது கிடையாது. கடந்த சில மாதங்களில் டிரம்ப் மொத்தமாக 7% இழந்து இருக்கிறார். இந்த நிலையில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கு 57% பேர் ஆதரவு அளித்து இருக்கிறார்கள்.

அங்கு பிடனுக்கு மொத்தம் 14% பேர் தற்போது கூடுதலாக ஆதரவு அளித்துள்ளனர். இதனால் டிரம்ப் தற்போது தோல்வியின் விளிம்பில் இருக்கிறார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. அவ்வளவுதான் என்று இப்போதே ஜனநாயக கட்சியினர் கூறிவிட்டனர். இதற்கு நிறைய காரணம் சொல்லப்படுகிறது. அவர் கொரோனா பாதிப்பை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று புகார் உள்ளது .

அவர் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்கிறார்கள். அதேபோல் அங்கு கொல்லப்பட்ட கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு குறித்து டிரம்ப் எதுவும் பேசவில்லை. அவர் போராட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டார். மக்கள் மீது ராணுவத்தை ஏவிவிடும் திட்டம் போட்டார். வெள்ளை மாளிகையில் ஒளிந்து கொண்டார் என்று நிறைய புகார்கள் உள்ளது. இதுதான் அவருக்கான ஆதரவு குறைய காரணம் என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் டிரம்ப்பிற்கு எதிராக அவரின் கட்சியை மூத்த அரசியல்வாதி கோலின் போவெல் போன்ற நபர்கள் கூட டிரம்பை எதிர்த்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் பிடனுக்கு ஆதரவாக ஒபாமா களமிறங்கி இருக்கிறார். ஒபாமாவின் வருகை அங்கு மக்கள் மத்தியில் பிடனுக்கு பெரிய ஆதரவை பெற்று தந்து இருக்கிறது. இதனால் டிரம்ப் என்ன செய்வது என்று தெரியாத நிலைக்கு சென்றுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter