நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செட்டிபுலம் தெற்கு காட்டில் வசித்த காளியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இறந்துவிட மூன்று பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை என நான்கு பிள்ளைகளும் ஆதரவின்றி நிற்கதியாய் நிற்பதாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில்
நீளுமா உதவிக்கரம் என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
இதனையடுத்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஐபிஎஸ்-ன் உத்தரவின்பேரில் வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, அந்த பெண் பிள்ளைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி காய்கறிகள் மளிகை பொருட்கள் மாஸ்க் சானிடைசர் ஆகியவற்றோடு வீட்டு செலவிற்காக ரூபாய் ஐந்தாயிரம் ஆகியவற்றை வழங்கி பிள்ளைகளின் கல்விச் செலவிற்கு வேண்டிய உதவிகளை செய்வதாகவும் கூறி ஆறுதல் கூறியுள்ளார்.
ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறு கூறியுள்ளார். வேதாரண்யம் பகுதியில் இவ்வாறு பல்வேறு உதவிகளை டிஎஸ்பி சபியுல்லா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

