86
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தி.மு.க திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜெ.அன்பழகன் சற்று முன் உயிரிழந்தார். இவர் 1958ல் ஜூன் 10ஆம் நாள் பிறந்தார். இன்று இவருக்கு பிறந்த நாள். (வயது 62)
கொரோனா தோற்று மற்றும் சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை தொடர்பாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக கடந்த வாரம் அவரது சட்டமன்றத் தொகுதியிலும் மற்ற இடங்களிலும் களப்பணி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.