தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் ஹாஜாநகரில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ஜமாலுதீன்.நேற்று(16.11.2017) இரவு 9மணிக்கு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.இன்று காலையில் வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.கடையில் பொருட்களை திருடுவதற்கான முயற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிராம்பட்டிணம் சில காலங்களாக திருடர்களின் புகலிடமாக மாறிவருகிறது.பல திருட்டு மற்றும் கொள்ளை முயற்சிகள் அரங்கேறிவருகின்றன.இதனை காவல்துறை கண்டுக்கொள்வதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
காவலர்கள் தன்னுடைய பொறுப்பை மறந்துவிடுகிறார்களோ என்ற அச்சம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதனை போக்குவதற்கு அதிராம்பட்டிணம் காவல் அதிகாரிகள் முன்வருவார்களா??