அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் வாய்க்கால் தெரு 13வது வார்டு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர்
கால்வாயின் மூடி சேதம் அடைந்துள்ளதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர். இந்த கால்வாயை நடைப்பாதையாகவும் பயன்படுத்துகின்றனர்.இரவுநேரங்களில் கீழே விழும் வாய்ப்புள்ளது.மேலும் கால்வாய் திறந்திருப்பதால் துர்நாற்றமும்,நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.
கடந்த சிலநாட்களுக்கு முன் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் தடுமாறி மூடிதிறந்த கால்வாயில் கீழே விழுந்தார்.அவருக்கு சிறு சிராய்வுகள் ஏற்பட்டன.இதனை பேரூராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து பெரும் விபரீதம் ஏற்படும் முன்பாக, கால்வாயின் கான்கிரீட் மூடியை சீரமைக்க அதிரை பேரூராட்சி எடுக்கவேணடும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.