தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அப்பொருப்பில் இருந்து வணிகவரித்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய சுகாதாரத்துறை செயலாளராக சென்னை மண்டல கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும், வருவாய்த்துறை செயலாளருமான டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் IAS மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணன் IAS ஏற்கனவே தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.