64
தமிழகத்தில் நடைபெற இருந்த 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டது. அப்போதே கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மத்தியில் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பல கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் தற்போதைக்கு தேர்வுகள் நடத்த வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.