Friday, January 17, 2025

குப்பை கிடந்த இடத்தை உட்காருமிடமாக மாற்றிய கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் அருகே காலியான இடம் ஒன்று இருந்தது. இந்த இடத்தில் முட்புதர்கள் வளர்ந்தும் , குப்பைகள் குவிந்தும் காணப்பட்டது. இதனை தூய்மைப்படுத்த வேண்டும் என முடிவெடுத்த கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் , அவ்விடத்தை தூய்மைபடுத்தும் பணியில் இறங்கினர்.

குவிந்து கிடந்த குப்பைகளையும் , வளர்ந்திருந்த முட்புதர்களையும் அகற்றி அவ்விடத்தை உட்கார்வதற்கு ஏற்ற வகையில் மாற்றியுள்ளனர். அவ்விடத்தில் உட்கார்வதற்கு கீழே கார்பெட் விரித்தும் ; அந்த இடத்தை வேலியால் அடைத்தும் பராமரித்து வருகின்றனர். கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்களின் தொடர் முயற்சியால் கடற்கரைத் தெருவில் குப்பை குவிந்து கிடக்கும் இடங்கள் எல்லாம் தூய்மையாகி வருகின்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...

மரண அறிவிப்பு – சமையல் நெய்னா (எ) நெய்னா முகம்மது.

புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் நெய்னா முகமது அவர்களின் பேரனும், மர்ஹும் முகைதீன் பக்கீர் அவர்களின் மகனும், வெட்டிவயல் யாசீன் அவர்களின் மருமகனும், செந்தலை...
spot_imgspot_imgspot_imgspot_img