அதிரை எக்ஸ்பிரஸ்:-தமிழ்மாநில முஸ்லிம்லீக் கட்சியினர்மஜகவில் இணைந்தனர். மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து விலகி தமீம் அன்சாரி தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சி தொடங்கினார்கள்.அன்சாரி அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்நிலையில் பல்வேறு கட்சியினர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் மஜகவில் இணைந்தனர்.
அவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
C.அம்ஜத் உசேன் B.com
(மாவட்ட தலைவர்)
A.முகம்மது சித்திக்
(மாவட்ட செயலாளர்)
C.முகம்மது ரபீக் BA
(பொருளாளர்)
S.சான் பாஷா
(மாவட்ட துணை செயலாளர்)
M.ஜாவித் பாஷா
(மாவட்ட துணைச் செயலாளர்)
இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லா கான், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர் உடனிருந்தனர்.
தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
சென்னை