டெல்லி மற்றும் உ.பி யில் திட்டமிட்டு முஸ்லிம்கள், மற்றும் சமூக செயற்பாட்டர்கள் NRC, CAA, NPR எதிராக போராடிய மாணவ போராளிகளை பொய் வழக்கில் கைது செய்யும் பாஷிச மத்திய அரசின் டெல்லி மற்றும் உ.பி காவல் துறையை கண்டித்து இந்தியா முழுவதும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்ப்பாட்டம்
இன்று (13.6.2020) சனிக்கிழமை நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பாக பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் மற்றும் நாேட்டிஸ் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகரத் தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் ஆசாத் நகர், தெற்கு தெரு, சரிபா வாய்ஸ் முக்கம் ஆகிய 3 இடங்களில் சமூக இடைவெளியோடு நடைபெற்ற பதாகை ஏந்தி கண்டன முழக்க ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் மர்சூக் அகமது,
தமுமுக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் தீன் முகமது,
SDPI கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக்,
மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா, நகர தலைவர் பாட்ஷா, ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு மத்திய அரசினுடைய ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


அதைப்போன்று தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் இன்று நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் மற்றும் செயலாளர், SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள்,கேம்பஸ் ஃப்ரண்டின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
