அமெரிக்க விஞ்ஞானிகள் மரபணு மாற்றத்தின் மூலம் மூன்று கண்களுடன் இறக்கை இல்லாத கொசுவை உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னிநா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பறக்க முடியாத, மூன்று கண்கள் கொண்ட கொசுவை உருவாக்கியுள்ளனர். இந்த கொசுக்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளன.
CRISPR/Cas9 என்ற மரபணு மாற்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த கொசுவின் மரபணுக்களில் மாற்றம் செய்துள்ளனர். இவ்வாறு கொசுக்கள் உருவாக்கப்படுவது ஏன் என்று கேட்டால் அதற்கு சற்றும் யூகிக்க முடியாத பதில் அவர்களிடம் உள்ளது.
இந்த மாதிரி கொசுக்களை உற்பத்தி செய்தால் அவற்றின் மூலம் பெருகும் கொசுக்களும் இதேபோல குறைபாடு உள்ளவையாக இருக்கும் என்றும் உயிரைப் பறிக்கும் பயங்கர நோய்களைப் பரப்பும் கொசுக்களின் பெருக்கத்தை இது கட்டுப்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்தபடியாக, ஏடிஸ் கொசுக்களில் இந்த மரபணு மாற்றத்தைச் செய்யப்போவதாகவும் இதனால் டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காமாலை மற்றும் ஜிகா வைரஸ் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.
கொசுவைக் கொல்லும் கொசுவை உருவாக்கிய விஞ்ஞானிகள்!!
94
previous post