அதிரை எக்ஸ்பிரஸ்:- சென்னையில் வீடு வாடகைக்கு தேடி உரிமையாளரிடம் கேட்க சென்ற பலருக்கு தெரியும் பலவிதமான கேள்விகளுக்கான விடையோடு தான் செல்லவேண்டும் என்று.அங்கு மதம்,பேச்சுலர்,போன்றவை பிரதான கேள்விகள் இவைகளின் காரணமாக வீடே கிடைக்காமல் போன ஏராளமான பிரபல்யங்களும் உண்டு.அதே நிலைமை சற்று மாறுதல்களாக அதிரையின் பக்கமும் மாறிவிட்டதோ என்ற கேள்வி எழுகிறது.
அதாவது அதிரையில் சமுதாய இயக்கங்களில் பங்கெடுப்பவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராடுபவர்களுக்கும்,ஒரு குறிப்பிட்ட இயக்கம், மற்றும் அரசியல் கட்சியினருக்கு வீடில்லை என்ற புதிய விதிமுறைகளை வீட்டின் சில உரிமையாளர்கள் வகுத்துள்ளார்களோ என்ற அச்சம் இயக்க மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அதிரை ஜியாவுதீன் அவர்களுக்கு வீடு வாடகைக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் பெயரை சொல்லி வீட்டின் உரிமையாளர் வாடகை்கு கொடுக்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.