தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் SDPI கட்சியின் 12ம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி இன்று(ஜூன்.21) கட்சியின் கொடியேற்றப்பட்டது.
SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் அப்துல் பஹத் தலைமையேற்றார்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல் இஸ்லாம் முன்னிலை வகித்தார் .இதில் கட்சியின் சிவப்பு, பச்சை நட்சத்திரம் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நகரச்செயலாளர் ஜவாஹீர் நன்றிவுரை ஆற்றினார்.இதில் முன்னாள் மாவட்ட பொருளாளர் சேக் ஜலால்,பாப்புலர் ஃப்ரண்ட் மல்லிப்பட்டிணம் ஏரியா தலைவர் ரபீக்கான் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் உடனிருந்தனர்.அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.